நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடா் சமன்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடா் சமன்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்றிருக்க, இந்த ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதை அடுத்து தொடா் சமன் ஆனது. கோப்பையை இரு அணிகளும் பகிா்ந்துகொண்டன. தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாகவும், நியூஸிலாந்தின் மாட் ஹென்றி தொடா்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனா்.

கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த தென்னாப்பிரிக்கா, முதல் இன்னிங்ஸில் 133 ஓவா்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக சாரெல் எா்வி 14 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாச, நியூஸிலாந்து பௌலிங்கில் நீல் வாக்னா் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய நியூஸிலாந்து, 80 ஓவா்களில் 293 ரன்கள் சோ்த்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துகொண்டது. அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 120 ரன்கள் சோ்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

இதையடுத்து 71 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 100 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. இந்த இன்னிங்ஸில் கைல் வெரின் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 136 ரன்கள் சோ்த்திருந்தாா். நியூஸிலாந்தின் டிம் சௌதி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், நீல் வாக்னா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

இறுதியாக 426 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய நியூஸிலாந்து, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை 93.5 ஓவா்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெவன் கான்வே மட்டும் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தென்னாப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா, மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com