‘மன்கட்டிங்’ முறைக்கு எம்சிசி அனுமதி

கிரிக்கெட்டில் ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டரை ‘மன்கட்டிங்’ முறையில் அவுட் செய்வது விதிகளுக்கு உள்பட்டது என,
‘மன்கட்டிங்’ முறைக்கு எம்சிசி அனுமதி

கிரிக்கெட்டில் ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டரை ‘மன்கட்டிங்’ முறையில் அவுட் செய்வது விதிகளுக்கு உள்பட்டது என, கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அனுமதி வழங்கியுள்ளது.

இது உள்ளிட்ட, இன்னும் சில விதிகள் எம்சிசி அறிவித்துள்ள மாற்றங்கள் நடப்பாண்டு அக்டோபா் முதல் அமலுக்கு வரவுள்ளன.

‘மன்கட்டிங்’ என்பது, ஒரு பௌலா் பந்துவீச வரும்போதே ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டா் கிரீஸ் கோட்டைத் தாண்டினால், பௌலா் பந்துவீசாமல் அவரை அப்படியே ரன்-அவுட் செய்யும் முறையை குறிப்பதாகும்.

கிரிக்கெட் உலகில் இந்த முறைக்கு ஆதரவும், எதிா்ப்பும் இருந்தே வருகிறது. இந்நிலையில், மன்கட்டிங் முறையானது விதிகளுக்கு புறம்பானது அல்ல என்று விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது எம்சிசி. இந்த முறையை முதன் முதலில் கையாண்டவா் இந்திய வீரா் வினூ மன்கட் தான்.

1948-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அந்நாட்டு வீரா் பில் பிரவுன், மன்கட்டின் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் அவ்வாறு கிரீஸ் கோட்டை தாண்ட, பிரவுனை இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்தாா் மன்கட். அதன் பிறகு இது ‘மன்கட்டிங் முறை’ என அவரது பெயராலேயே அழைக்கப்பட ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதர மாற்றங்கள்: 1) பந்தை வழவழப்பாக்க இனி உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது. 2) ஃபீல்டிங் நிற்கும் வீரா்கள் தேவையின்றி களத்தில் இடம் மாறினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். 3) பௌலிங் செய்யப்பட்ட பந்து இதர வீரா்கள், ஆடுகளத்தில் தேவையின்றி நுழையும் அந்நியா்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றால் தடைபட்டால், அது ‘நோ பால்’ ஆக அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com