நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியாவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. 
நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா


ஹாமில்டன்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியாவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. 

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, 2-ஆவது ஆட்டத்தில் இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

சமீபத்தில் நியூஸிலாந்துடனான ஒன் டே தொடரை 1-4 என இந்தியா இழந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் அடித்தது. அடுத்து இந்தியா 46.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்தின் எமி சேட்டர்வெயிட் ஆட்டநாயகி ஆனார். 

டாஸ் வென்ற இந்தியா, நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் இன்னிங்ஸில் எமி சேட்டர்வெயிட் 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் அடிக்க, எமிலியா கெர் 50, கேட்டி மார்டின் 41, கேப்டன் சோஃபி டிவைன் 35 ரன்கள் சேர்த்தனர். இந்திய பெüலிங்கில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார். 

பின்னர் 261 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் சோபிக்கத் தவறியது. ஹர்மன்பிரீத் கெüர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் விளாசினார். கேப்டன் மிதாலி ராஜ் 31, யஸ்திகா பாட்டியா 28 ரன்கள் அடிக்க, இதர பேட்டர்களால் வெற்றிக்கு வழி வகுக்க முடியவில்லை. 

நியூஸிலாந்து பெüலர்களில் லீ டஹுஹு, எமிலியா கெர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

புள்ளிகள் பட்டியலில் தற்போது 2 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் 12-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடுகிறது. 

ஜுலன் கோஸ்வாமி சாதனை 

இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 1 விக்கெட்டையும் சேர்த்து, இதுவரையிலான உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தமாக 39 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவே ஒரு பெüலரின் அதிகபட்சமாகும். ஏற்கெனவே ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் லின் ஃபுல்ஸ்டன் இதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்க, அதை தற்போது ஜுலன் கோஸ்வாமியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com