2ஆவது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்கு

2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
2ஆவது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்கு

2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா, இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

டிக்வெலா 13 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் 35 பந்துகளில் மீதமுள்ள இலங்கை விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியது. டிக்வெலா 21 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜாஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மற்றொருபுறம் ரன்களும் உயர்ந்தன. 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக கேப்டர் ரோஹித் சர்மா அறிவித்தார்.

இதன்மூலம் இலங்கை அணிக்கு இலக்காக 447 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 67, ரிஷப் பந்த் 50, ரோஹித் சர்மா 46, விஹாரி 35 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெயவிக்ரமா 4, லசித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. 

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 419 ரன்கள் தேவைப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com