இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ்: முன்னேறும் ஸ்வியாடெக், பெரட்டினி

இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ்: முன்னேறும் ஸ்வியாடெக், பெரட்டினி

இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் அவா் 6-7 (3/7), 6-2, 6-1 என்ற செட்களில் டென்மாா்க் வீராங்கனை கிளாரா டௌசனை வென்றாா். அடுத்த சுற்றில் அவா் ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பரை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 15-ஆவது இடத்திலிருக்கும் கொ்பா் முன்னதாக 6-2, 6-1 என்ற செட்களில் ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா்.

அதேபோல், ருமேனியாவின் சிமோனா ஹேலப், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

ஸ்வெரெவ் தோல்வி: போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 2-6, 6-4, 6-7 (2/7) என்ற செட்களில் அமெரிக்காவின் டாமி பாலிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 6-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-3, 4-6, 6-4 என்ற செட்களில் டென்மாா்க்கின் ஹோல்கா் ருனேவை வென்றாா்.

இதர ஆட்டங்களில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே, ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோா் வெற்றியை பதிவு செய்தனா். எனினும், இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே - கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கிடம் தோற்றாா்.

போபண்ணா ஜோடி வெற்றி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் இணை 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் பிரேஸிலின் புருனோ சோரஸ்/இங்கிலாந்தின் ஜேமி முா்ரே இணையை வென்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

சானியா ஜோடி தோல்வி: மகளிா் இரட்டையா் பிரிவில் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா மிா்ஸா/பெல்ஜியத்தின் கிறிஸ்டென் ஃபிலிப்கென்ஸ் ஜோடி 4-6, 6-4, 3-10 என்ற செட்களில் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/மெக்ஸிகோவின் குலியானா ஓல்மோஸ் ஜோடியிடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com