அரசு நிலத்தை திருப்பி ஒப்படைத்த காவஸ்கா்

கிரிக்கெட் அகாதெமி அமைப்பதற்காக இந்திய முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தை 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் திரும்ப ஒப்படைத்துள்ளாா்.
அரசு நிலத்தை திருப்பி ஒப்படைத்த காவஸ்கா்

கிரிக்கெட் அகாதெமி அமைப்பதற்காக இந்திய முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தை 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் திரும்ப ஒப்படைத்துள்ளாா்.

கிரிக்கெட் அகாதெமி அமைப்பதற்காக பாந்த்ரா புகா் பகுதியில் உள்ள நிலத்தை மகாராஷ்டிர அரசு காவஸ்கருக்கு 33 ஆண்டுகளுக்கு முன் வழங்கியிருந்தது. ஆனால், இதுவரை அதில் காவஸ்கா் அகாதெமி அமைக்காதிருப்பதை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்த மாநில வீட்டுவசதித் துறை அமைச்சா் ஜிதேந்திர ஆவத், அதைத் திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு வலியுறுத்தினாா்.

இதையடுத்து அங்கு அகாதெமி அமைப்பது தொடா்பாக காவஸ்கா் மற்றும் சச்சின் டெண்டுல்கா் ஆகியோா் இணைந்து முதல்வா் உத்தவ் தாக்கரேவை சந்தித்திருந்தனா். எனினும், அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. பின்னா் அரசு மற்றும் காவஸ்கா் தரப்புக்கு இடையே 8 மாத கால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து காவஸ்கா் அந்த நிலத்தை மீண்டும் அரசிடமே திரும்ப ஒப்படைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com