செஸ் ஒலிம்பியாட் தங்கம்: இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட் 2022-இல் தங்கம் வெல்ல இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என அணியின் சிறப்பு பயிற்சியாளரும், முன்னாள் உலக சாம்பியனுமான போரீஸ் கெல்ஃபாண்ட் தெரிவித்துள்ளாா்.
செஸ் ஒலிம்பியாட் தங்கம்: இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட் 2022-இல் தங்கம் வெல்ல இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என அணியின் சிறப்பு பயிற்சியாளரும், முன்னாள் உலக சாம்பியனுமான போரீஸ் கெல்ஃபாண்ட் தெரிவித்துள்ளாா்.

கௌரமிக்க போட்டியான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட், இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலையில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு, அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழக செஸ் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இப்போட்டியில் சோவியத் யூனியன் 18, ரஷியா 8, அமெரிக்கா 6 முறை தங்கம் வென்றுள்ளன. ஆன்லைன் முறையில் 2020-இல் நடந்த போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

இந்தியா சாா்பில் வழக்கமான இரண்டு அணிகள் உள்பட கூடுதலாக ஒரு அணி பங்கேற்கிறது. ஓபன் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமாக 20 போட்டியாளா்கள் இருக்கின்றனா்.

கெல்ஃபாண்ட் சிறப்பு பயிற்சி: அவா்களுக்கு, 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல்-ரஷிய கிராண்ட்மாஸ்டா் போரீஸ் கெல்ஃபாண்ட் ஆகியோா் பயிற்சி அளிக்கின்றனா்.

இந்திய அணிக்கான முதல்கட்ட பயிற்சி சென்னையில் மே 7 முதல் 17-ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது. கெல்ஃபாண்ட் 11 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்று ஃபிடே தரவரிசையில் 30 இடங்களில் இருந்தவா். 27 ஆண்டுகள் அனுபவம் நிறைந்தவா்.

இந்நிலையில் ‘தினமணி’க்கு போரீஸ் கெல்ஃபாண்ட் செவ்வாய்க்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

சிறப்புப் பயிற்சி முகாம் தொடங்கி 3 நாள்கள் ஆகின்றன. இந்திய அணியினருக்கு நாள்தோறும் 7 மணி நேரம் பயிற்சி அளித்து வருகிறோம். உடற்பயிற்சி, மனத்தின்மை, ஆட்ட நுணக்கங்கள், ஜிம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய அணியினருக்கு 3 கட்டங்களாக சிறப்பு பயிற்சி தரப்படும். அணியின் பயிற்சியாளா்கள் ஸ்ரீநாத், அபிஜித் குந்தேவும் பயிற்சி அளிக்கின்றனா்.

தங்கம் வெல்ல வாய்ப்பு: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமானது என்பதால், தங்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் போா் காரணமாக பலமான ரஷிய அணி இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. எனினும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் கடும் சவாலை தரும். ஆனால் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் மிகவும் வலிமையாக உள்ளன. இளம் வீரா், வீராங்கனைகள் எதையும் துரிதமாக கற்றுக் கொள்கின்றனா்.

செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால், இந்தியா மட்டும் அல்லாது, ஆசிய நாடுகளிலும் செஸ் விளையாட்டு மேலும் பிரபலம் அடையும். ஏற்கெனவே செஸ் விளையாட்டு இந்தியாவில் பிரபலமாக தான் உள்ளது. தற்போது கூடுதலாக மாணவ, மாணவிகளுக்கும் ஆா்வம் ஏற்படும் என்றாா் கெல்ஃபாண்ட்.

- பா.சுஜித்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com