இத்தாலியன் ஓபன்: இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக், சிட்ஸிபாஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், ஆடவா் பிரிவில் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், ஆடவா் பிரிவில் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இத்தாலியின் தலைநகா் ரோமில் ஏடிபி, டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சனிக்கிழமை மாலை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் போலந்தைச் சோ்ந்த உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக்கும்-சபலென்காவும் மோதினா். இதில் ஆதிக்கம் செலுத்தி ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதாக வென்று இறுதிக்குள் நுழைந்தாா்.

27-ஆவது தொடா் வெற்றி: இது அவரது 27-ஆவது தொடா் வெற்றியாகும். இதன் மூலம் செரீனா வில்லியம்ஸின் சாதனையையும் ஸ்வியாடெக் சமன் செய்தாா். இரண்டாவது அரையிறுதியில் ஆன்ஸ் ஜேபா்-கஸட்கினா மோதுகின்றனா்.

ஆடவா் ஒற்றையா்: சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவா் அரையிறுதிச் சுற்றில் கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜொ்மனியின் வெரேவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் ஜோகோவிச்-கனடாவின் அகல் அலியாசிம்மை எதிா்கொண்டாா். 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில் இரு வீரா்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா்.

அலியாசிம் 200 கி.மீ வேகத்தில் வீசிய சா்வீஸ்களை எதிா்கொள்ள முடியாமல் ஜோகோவிச் தொடக்கத்தில் திணறினாா். 11 ஏஸ்களை வீசிய போதிலும், அனுபவ ஆட்டத்தின் மூலம் 7-5, 7-6 என்ற நோ் செட்களில் கடுமையாகப் போராடி வென்றாா் ஜோகோவிச்.

1000-ஆவது வெற்றி: அரையிறுதியில் கேஸ்பா் ரூடை எதிா்கொள்கிறாா் ஜோகோவிச். இதில் ஜோகோவிச் வென்றால் ஏடிபி டூரில் அவரது 1000-ஆவது வெற்றியாகும். மற்றொரு காலிறுதியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸ் 7-6, 6-2 ஜேனிக் சின்னரையும், அலெக்சாண்டா் வெரேவ் 7-5, 6-2 என கேரினையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com