தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: வரலாறு படைத்தது இந்தியா

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: வரலாறு படைத்தது இந்தியா

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தோனேசிய அணியை, இந்தியா எதிர்கொண்டது. அதில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி. 

தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com