துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) நடத்திய ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 33 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. 

புது தில்லி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) நடத்திய ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 33 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. 
ஜெர்மனியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பதக்க வரிசையில் 13 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும். போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை 50 மீட்டர் ரைஃபிள் புரோன் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சர்மா/சூர்ய பிரதாப் சிங் ஆகியோர் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்து இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் அபய் சிங் செகோன்/அரீபா கான் இணை, பவ்தேக் சிங் கில்/தர்ஷனா ரத்தோர் கூட்டணி இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தன.  முன்னதாக, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஸ்கீட் மகளிர் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் பரினாஸ் தலிவால்/தர்ஷனா ரத்தோர்/அரீபா கான் கூட்டணி 6-0 என ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் பெற்றது. 
அதேபோல், 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கெளர் பிரார்/விஜய்வீர் சித்து கூட்டணி தங்கமும், அனீஷ்/தேஜஸ்வினி கூட்டணி வெள்ளியும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com