தென்னாப்பிரிக்கத் தொடர்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்
By DIN | Published On : 22nd May 2022 06:00 PM | Last Updated : 22nd May 2022 06:18 PM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இரு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், பிஷ்னோய், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.