ஜோர்டானுடன் மோதும் இந்திய அணியில் சுனில் சேத்ரி

ஜோர்டான் அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மோதவிருக்கும் இந்திய அணியில் சுனில் சேத்ரி இணைந்திருக்கிறார். 
ஜோர்டானுடன் மோதும் இந்திய அணியில் சுனில் சேத்ரி

புது தில்லி: ஜோர்டான் அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மோதவிருக்கும் இந்திய அணியில் சுனில் சேத்ரி இணைந்திருக்கிறார். 
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதி தகுதிச்சுற்று ஆட்டங்களுக்கு தயாராகும் வகையில் இந்த நட்பு ரீதியிலான கால்பந்தில் இந்தியா 28-ஆம் தேதி விளையாடுகிறது. இதற்காக சேத்ரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட அணி புதன்கிழமை (மே 25) தோஹா செல்கிறது. 
காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக களம் காணாதிருந்த சேத்ரி, தற்போது அணிக்குத் திரும்பியிருக்கிறார். கடைசியாக கடந்த அக்டோபரில் தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில் நேபாளை வீழ்த்தி இந்தியா வாகை சூடிய இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடியிருந்தார். 
 அணி விவரம்:  குர்பிரீத் சிங் சந்து, லக்ஷ்மிகாந்த் கட்டிமணி, அமரீந்தர் சிங் (கோல்கீப்பர்கள்); ராகுல் பேகே, ஆகாஷ் மிஸ்ரா, ஹர்மன்ஜோத் சிங் கப்ரா, ரோஷன் சிங், அன்வர் அலி, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ், ப்ரீதம் கோட்டல் (டிஃபெண்டர்கள்); ஜீக்சன் சிங், அனிருத் தாபா, கிளான் மார்டின்ஸ், பிராண்டன் ஃபெர்னாண்டஸ், ரித்விக் தாஸ், உதாந்தா சிங், யாசிர் முகமது, சாஹல் அப்துல் சமத், சுரேஷ் வாங்ஜாம், ஆஷிக் குருனியன், லிஸ்டன் கோலாகோ (மிட்ஃபீல்டர்கள்); இஷான் பண்டிதா, சுனில் சேத்ரி, மன்வீர் சிங் (முன்கள வீரர்கள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com