சர்வதேச தடகளம்:  முரளிக்கு தங்கம்

கிரீஸில் நடைபெற்ற 12-ஆவது சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 
சர்வதேச தடகளம்:  முரளிக்கு தங்கம்

புது தில்லி: கிரீஸில் நடைபெற்ற 12-ஆவது சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 

காலிதியா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முரளி, வியாழக்கிழமை 8.31 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். ஸ்வீடன் வீரர் தோபியாஸ் மான்ட்லர் (8.27 மீட்டர்) வெள்ளியும், பிரான்ஸின் ஜூல்ஸ் போமெரி (8.17 மீட்டர்) வெண்கலமும் பெற்றனர். 

மொத்தம் 10 பேர் பங்கேற்ற இப்பிரிவில், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே 8 மீட்டர் தூரத்தை தாண்டினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிறகு முரளி கலந்துகொள்ளும் முதல் வெளிமைதான சர்வதேச போட்டி இதுவாகும். முன்னதாக தனது "வார்ம் அப்' முயற்சியின்போது 7.88 மீ, 7.71 மீ நீளம் தாண்டிய முரளி, இறுதியில் 8 மீட்டர் இலக்கை தாண்டினார். 

நீளம் தாண்டுதலில் தற்போதைய தேசிய சாதனை முரளி ஸ்ரீசங்கரிடமே உள்ளது. கடந்த மாதம் ஃபெடரேஷன் கோப்பை போட்டியின்போது 8.36 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்தார் முரளி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com