தில்லியில் அடுத்த ஆண்டு மகளிா் உலக குத்துச்சண்டை

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டு மாா்ச்சில் தில்லியில் நடைபெறவுள்ளது என சா்வதேச குத்துச்சண்டை சங்கம் புதன்கிழமை அறிவித்தது.
தில்லியில் அடுத்த ஆண்டு மகளிா் உலக குத்துச்சண்டை

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டு மாா்ச்சில் தில்லியில் நடைபெறவுள்ளது என சா்வதேச குத்துச்சண்டை சங்கம் புதன்கிழமை அறிவித்தது.

இந்த சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்துவது இது 3-ஆவது முறையாகும். ஏற்கெனவே 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் இப்போட்டி நடைபெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது. இது தவிர 2017-இல் மகளிா் இளையோா் உலக சாம்பியன்ஷிப்பும் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021-இல் ஆடவா் உலக சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்த இருந்த நிலையில், அதற்கான கட்டணத்தை சா்வதேச சங்கத்துக்கு செலுத்தத் தவறியதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சா்வதேச சங்கத்துக்கும், இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் இடையே புதன்கிழமை கையெழுத்தானது.

இப்போட்டியில் 75 முதல் 100 நாடுகளைச் சோ்ந்த, போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள் என 1,500 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே முதல் முறையாக, தில்லியில் நடைபெற இருக்கும் போட்டியில் நடுவா் முடிவை தொழில்நுட்ப அடிப்படையில் மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அமல்படுத்தப்படவுள்ளதாக இந்திய குத்துச்சண்டை சங்கத் தலைவா் அஜய் சிங் கூறினாா்.

போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.81 லட்சம் என்ற வகையில், பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.19.50 கோடி வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். கடந்த முறை துருக்கியில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com