நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: சவிதா தலைமையில் இந்திய அணி

ஸ்பெயினில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஃப்ஐஹெச் நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி சவிதா தலைமையில் 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: சவிதா தலைமையில் இந்திய அணி

ஸ்பெயினில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஃப்ஐஹெச் நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி சவிதா தலைமையில் 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் சாம்பியனாகும் அணி, 2023-24 சீசன் எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டிக்குத் தகுதிபெறும். நேஷன்ஸ் கோப்பை போட்டியில் இது முதல் சீசன் ஆகும். இதில் இந்தியா குரூப் ‘பி’-யில் சிலி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இணைந்திருக்கிறது. குரூப் ‘ஏ’-வில் அயா்லாந்து, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் அணிகள் உள்ளன.

ஸ்பெயினின் வாலென்சியா நகரில் டிசம்பா் 11 முதல் 17 வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில், இந்தியா முதல் ஆட்டத்தில் சிலியை சந்திக்கிறது.

அணி விவரம்:

சவிதா, பிஷு தேவி காரிபம் (கோல்கீப்பா்கள்); தீப் கிரேஸ் எகா, குா்ஜித் கௌா், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சௌதரி (டிஃபெண்டா்கள்); நிஷா, சலிமா டெடெ, சுஷிலா சானு புக்ரம்பம், மோனிகா, நேஹா, சோனிகா, ஜோதி, நவ்ஜோத் கௌா் (மிட்ஃபீல்டா்கள்); வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கௌா், சங்கீதா குமாரி, பியூட்டி டங்டங் (ஃபாா்வா்டுகள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com