ஆசிய துப்பாக்கி சுடுதல்: பதக்கம் குவிக்கும் இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு சனிக்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

தென் கொரியாவில் நடைபெறும் 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு சனிக்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மெஹுலி கோஷ் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் கோ யுன்யங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். கஜகஸ்தானின் லெ அலெக்ஸாண்ட்ரா வெண்கலம் பெற்றாா்.

அதேபோல், ஜூனியா் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் திலோத்தமா சென் 17-12 என்ற புள்ளிகளில் சக நாட்டவரான நான்சியை வெல்ல, இந்தியாவுக்கு முதலிரு இடங்கள் கிடைத்தன. ஜப்பானின் மிசாகி நொபாடா வெண்கலம் வென்றாா்.

யூத் மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில் 3 பதக்கங்களையுமே இந்தியா்கள் வென்றனா். யுக்தி ராஜேந்திரா 16-14 என கௌதமி பானோத்தை வீழ்த்தி தங்கம் வெல்ல, ஹேஸெலுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அதிலேயே ஆடவா் பிரிவில் இந்தியாவின் பாா்த் ராகேஷ் மனே 16-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் செமின் ஹாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். உஸ்பெகிஸ்தானின் ஜவோஹிா் சோகிபோவ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com