இந்திய ஆடவரும் தோல்வி
By DIN | Published On : 07th October 2022 06:05 AM | Last Updated : 07th October 2022 06:35 AM | அ+அ அ- |

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
இப்போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய மகளிா் அணி ஏற்கெனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறியது. தற்போது ஆடவா் அணியும் அதே சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டு நாடு திரும்புகிறது.
அந்த சுற்றில் இந்திய ஆடவா் அணி 0-3 என்ற கணக்கில் பலம் வாய்ந்த சீனாவிடம் வெற்றியை இழந்தது. இந்திய தரப்பில் ஹா்மீத் தேசாய் 2-11, 9-11, 5-11 என்ற கணக்கில் உலகின் நம்பா் 1 வீரரான ஃபான் ஜென்டாங்கிடம் தோல்வி கண்டாா். அடுத்து சத்தியனும் 21-14, 5-11, 0-11 என மா லாங்கால் வீழ்த்தப்பட்டாா். இறுதியாக மனுஷ் ஷாவை 4-11, 5-11, 6-11 என வாங் சுகின் வென்றாா்.