உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12க்குள் நுழைந்த ஜிம்பாப்வே

உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது ஜிம்பாப்வே.
உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12க்குள் நுழைந்த ஜிம்பாப்வே

உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது ஜிம்பாப்வே.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இன்று (அக்டோபர் 21) மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜார்ஜ் முன்ஷி 54 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஜிம்பாப்வே. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கிரைக் எர்வின் மற்றும் வெஸ்லி மதேவிர் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் எர்வினுடன் ஜோடி சேர்ந்தார் சிகந்தர் ராஸா. இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. அதிரடியாக விளையாடிய சிகந்தர் ராஸா 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பாக விளையாடிய கேப்டன் எர்வின் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 18.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக ஜிம்பாப்வே உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக, இன்றையப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அயர்லாந்து உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com