தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூப்பா் 12 சுற்றில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூப்பா் 12 சுற்றில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 16.3 ஓவா்களில் 101 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தென்னாப்பிரிக்காவின் ரைலீ ருசௌவ் ஆட்டநாயகன் ஆனாா்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காவில் ரைலீ ருசௌவ் அதிரடியாக விளாசிய 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 109 ரன்கள் குவித்தாா். குவின்டன் டி காக்கும் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் விளாச, கேப்டன் டெம்பா பவுமா 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7, எய்டன் மாா்க்ரம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 2, வேய்ன் பாா்னெல் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலிங்கில் ஷகிப் அல் ஹசன் 2, டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், அஃபிஃப் ஹுசைன் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் வங்கதேச பேட்டிங்கில் லிட்டன் தாஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சோ்த்து முயற்சிக்க, சௌம்யா சா்காா் 15, மெஹதி ஹசன் மிராஸ் 11, டஸ்கின் அகமது 10 ரன்களுக்கு வெளியேற, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. தென்னாப்பிரிக்க பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா 4, டப்ரைஸ் ஷம்ஸி 3, ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சாதனை...

இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்த ஸ்கோா் (205/5), நடப்பு உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, கடந்த 22-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து பதிவு செய்த ஸ்கோரே (200/3) அதிகபட்சமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com