டி20 உலகக் கோப்பை: கடைசி ஓவரில் வங்க தேசம் ‘த்ரில்’ வெற்றி! 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்க தேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்க தேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் பி-இல் வங்க தேச அணி ஜிம்பாப்வேயுடன் விளையாடியது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதில் அதிகபட்சமாக 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். ஷகிப் 23 ரனகளும், ஹொசைன் 29 ரன்களும், லிட்டன் தாஸ் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது வங்கதேச அணி. 

ஜிம்பாப்வே அணியில் நகர்வா, முசாராபாணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ராஜா, வில்லியம்ஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் மோசமான தொடக்கத்தை அளித்தனர். பின்னர் சீன் வில்லியம்ஸ் தனியாளாக நின்று விளையாடினார். 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் வீசிய 19வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் திருப்பு முனையாக இருந்ததே இங்குதான். 

கடைசி ஓவரில் த்ரில்: 

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இரண்டாவது பந்தில் விக்கெட் விழுந்தது. தற்போது 4 பந்தில் 15 ரன்கள் தேவையான நிலையில் 3வது பந்து பவுண்டரி சென்றது. 4வது பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார் நகர்வா. 2 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5வது பந்தில் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார் நகர்வா. கடைசி பந்திலும் ஸ்டம்பிங். ஆனால் கீப்பர் ஸ்டம்பிற்கு முன்னால் பந்தினைப் பிடித்ததால் நோ பாலாக அறிவிக்கப்பட்டது. தற்போது 1 பந்துக்கு 4 ரன்கள் தேவை. மீண்டும் கடைசி பந்தில் ஸ்டம்பிங் ஆனது. 

3 விக்கெட்டுகள் எடுத்த டஸ்கின் அஹமது ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். 

வங்கதேச அணியினரும் ரசிகர்களும் இந்த வெற்றியினை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com