ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று அட்டவணை

இந்திய அணியின் அனைத்து ஆட்டங்களும் துபையில் நடைபெறவுள்ளன.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று அட்டவணை
Published on
Updated on
1 min read

ஆசியக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் சூப்பர் 4 சுற்று தொடங்கவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் குரூப் 4 சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. வங்கதேசம், ஹாங்காங் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

குரூப் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி செப்டம்பர் 6 அன்று இலங்கை அணிக்கு எதிராகவும் செப்டம்பர் 8 அன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் மோதவுள்ளது. இந்திய அணியின் அனைத்து ஆட்டங்களும் துபையில் நடைபெறவுள்ளன. செப்டம்பர் 11 அன்று துபையில் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. 

ஆசியக் கோப்பை: சூப்பர் 4 சுற்று

செப். 3: இலங்கை vs ஆப்கானிஸ்தான்
செப். 4: இந்தியா vs பாகிஸ்தான்
செப்.6: இந்தியா vs இலங்கை
செப்.7: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
செப்.8: இந்தியா vs ஆப்கானிஸ்தான்
செப்.9: பாகிஸ்தான் vs இலங்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com