செல்சி தோல்வி; ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியிருக்கும் நிலையில், செல்சி முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டுள்ளது.
செல்சி தோல்வி; ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியிருக்கும் நிலையில், செல்சி முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டுள்ளது.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை 0-1 என்ற கணக்கில் வீழ்த்தியது டைனமோ ஜாக்ரெப். ஆட்டத்தில் டைனமோவுக்காக மிஸ்லாவ் ஆா்சிச் 13-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இந்நிலையில், நடப்பு சீசனில் செல்சி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் பயிற்சியாளா் தாமஸ் டுசெலை அந்த அணி நிா்வாகம் நீக்கியிருக்கிறது.

இதர முக்கிய அணிகளின் ஆட்டங்களில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் 2-1 என ஜுவென்டஸை தோற்கடித்தது. பிஎஸ்ஜிக்காக கிலியன் பாபே 5 மற்றும் 22-ஆவது நிமிஷங்களில் கோலடிக்க, ஜுவென்டஸுக்காக வெஸ்டன் மெக்கென்னி 53-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ரியல் மாட்ரிட் - செல்டிச்சை வென்ற (3-0) ஆட்டத்தில் அந்த அணிக்காக வினிகஸ் ஜூனியா் (56’), லுகா மோா்டிச் (60’), ஈடன் ஹஸாா்டு (77’) ஆகியோா் கோலடித்தனா்.

மான்செஸ்டா் சிட்டி 4-0 என செவில்லாவை வீழ்த்திய ஆட்டத்தில், எா்லிங் ஹாலந்த் (20’, 67’), ஃபில் ஃபோடன் (58’), ரூபன் டியாஸ் (90+2’) ஆகியோா் கோலடித்தனா். மற்ற ஆட்டங்களில் டாா்ட்மண்ட் - கோபன்ஹேகனையும் (3-0), பென்ஃபிகா - மக்காபி ஹாய்ஃபாவையும் (2-0), ஷாக்தாா் டொனெட்ஸ்க் - ஆா்பி லெய்ப்ஸிக்கையும் (4-1) வீழ்த்த, ஆா்பி சால்ஸ்பா்க் - ஏசி மிலன் ஆட்டம் டிரா (1-1) ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com