பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை, 121 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்
By DIN | Published On : 09th September 2022 09:24 PM | Last Updated : 09th September 2022 09:24 PM | அ+அ அ- |

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். முகமது ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பாபர் அசாம் 29 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வண்ணமே இருந்தது.
இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு
ஆட்டத்தின் இறுதியில் முகமது நவாஸ் 18 பந்துகளில் 26 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் அணிக்கு ஒரளவிற்கு ரன்கள் கிடைத்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை தரப்பில் சிறப்பாக செயல்பட்ட வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா மற்றும் பிரமோத் மதுசன் தலா 2 விக்கெட்டுகளையும், சமீகா கருணாரத்னே மற்றும் தனஞ்ஜெயா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிக்க: 100 நாள் வெற்றியில் விக்ரம் திரைப்படம்
இதனையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்குகிறது இலங்கை அணி.