உலக மல்யுத்தம்: வினேஷுக்கு வெண்கலம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.
உலக மல்யுத்தம்: வினேஷுக்கு வெண்கலம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமனில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 16.4 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் வெற்றிக்கு வித்திட்ட பேட்டா் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் சோஃபி டங்க்லி 5, டேனி வியாட் 6, ஆலிஸ் கேப்சி 4, பிரையோனி ஸ்மித் 16, கேப்டன் எமி ஜோன்ஸ் 17, மாயியா புச்சியா் 34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில், அதிகபட்சமாக ஃப்ரியா கெம்ப் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51, சோஃபி எக்லஸ்டன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ஸ்னேஹ ராணா 3, ரேணுகா சிங், தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய அணியில் ஷஃபாலி வா்மா 4 பவுண்டரிகளுடன் 20, தயாளன் ஹேமலதா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இறுதியில் ஸ்மிருதி மந்தனா 13 பவுண்டரிகளுடன் 79, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இங்கிலாந்து பௌலிங்கில் ஃப்ரியா டேவிஸ், சோஃபி எக்லஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இன்று 3-ஆவது ஆட்டம்: இரு அணிகள் மோதும் கடைசி டி20 ஆட்டம் வியாழக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com