தென்னாப்பிரிக்க டி20: ஏலத்திற்கு மிக்ஸருடன் ரெடியாகும் ஜேஎஸ்கே! 

தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் நடத்தும் புதிய டி20 போட்டி வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. 
படம் : டிவிட்டர் | ஜேஎஸ்கே
படம் : டிவிட்டர் | ஜேஎஸ்கே

தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் நடத்தும் புதிய டி20 போட்டி வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. 

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாப் டு பிளெஸ்சிஸ் ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தார். அவர் 2022 ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. 2011 முதல் 2015, 2018-2021 வரை சிஎஸ்கே அணிக்காக 100 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 

தற்போது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா நிர்வாகம் புதிய டி20 தொடரை நடத்த உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 ஐபில் உரிமையாளர்களும் 6 அணிகளை வாங்கியுள்ளனர். இதில் சிஎஸ்கே அணியும் ஒரு அணியை வாங்கியுள்ளது. அதன் பெயர் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே). இதன் கேப்டனாக ஃபாப் டு பிளெஸ்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவதால அவரால் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது. கேப்டனை தவிர்த்து இன்னும் 4 வீரர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொயின் அலி, மகேஷ் தீக்‌ஷனா, ஷெப்பியார்ட், ஜெரால்டு கோட்சீ. 2023 ஜனவரியில் இந்த டி20 தொடர் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடைபெற்று வருகிறது. Joburg Super Kings முகநூல் பக்கத்தில் இதனை நேரலையில் பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com