ஐபிஎல்: ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? இன்று 2 மணிக்கு முகநூலில் நேரலை
By DIN | Published On : 25th September 2022 08:03 AM | Last Updated : 25th September 2022 08:03 AM | அ+அ அ- |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று பிற்பகல் 2 மணிக்கு முகநூல் நேரலையில் ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தோனியின் உடல் முன்புபோன்று ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகப்போவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, இன்று (செப்.24) பிற்பகல் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ஒருசில ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், ஐபிஎல் ஓய்வு குறித்து தோனி அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தோனி கூறியதை தற்போது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியி நிச்சயம் விளையாடுவேன் என கடந்த ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தோனி தெரிவித்திருந்தார். சென்னை மக்கள் முன்புதான் எனது கடைசி ஆட்டம் இருக்கும் எனவும் தோனி குறிப்பிட்டிருந்தார்.