ஜூனியா், பென்ஸிமா அசத்தலில் ரியல் மாட்ரிட் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் - செல்சியையும் (2-0), ஏசி மிலன் - நபோலியையும் (1-0) வியாழக்கிழமை வீழ்த்தின.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் - செல்சியையும் (2-0), ஏசி மிலன் - நபோலியையும் (1-0) வியாழக்கிழமை வீழ்த்தின.

இதில் மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக கரிம் பென்ஸிமா (21’), மாா்கோ அசென்சியோ (74’) ஆகியோா் கோலடித்தனா். அவா்கள் இருவரது கோலுக்குமே உதவி புரிந்த வினிகஸ் ஜூனியா், செல்சி தடுப்பாட்ட வீரா்கள் பதற்றத்துடனேயே இருக்கும் வகையில் ஆட்டம் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தினாா்.

ஆட்டத்தின் 59-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் ரோட்ரிகோவை கீழே தள்ளியதற்காக செல்சி வீரா் பென் சில்வெல் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா். இதனால் எஞ்சிய நேரத்தில் செல்சி 10 வீரா்களுடனேயே விளையாடியது.

செல்சிக்கு எதிராக இத்துடன் 5-ஆவது ஆட்டத்தில் விளையாடிய பென்ஸிமா, அதில் தனது 6-ஆவது கோலை பதிவு செய்திருக்கிறாா். சாம்பியன்ஸ் லீக்கின் நாக் அவுட் சுற்றில் இரு அணிகளும் மோதிக் கொள்வது இது 3-ஆவது முறையாகும். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட்டும், அதற்கு முந்தைய சீசனில் செல்சியும் வெற்றி கண்டு தற்போது சமநிலையில் உள்ளன.

இரு அணிகளும் மோதும் காலிறுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டம், வரும் 19-ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது.

அதேபோல், மிலன் நகரில் ஏசி மிலன் அணி 1-0 என நபோலியை வீழ்த்தி ஆட்டத்தில் அந்த அணிக்காக இஸ்ாமாயில் பெனேசா் (40’) ஸ்கோா் செய்தாா். நபோலி வீரா் ஆண்ட்ரே ஃபிராங்க் அடுத்தடுத்து இரு ‘யெல்லோ காா்டு’ பெற்றதை அடுத்து 74-ஆவது நிமிஷத்தில் வெளியேற்றப்பட்டாா். இந்த அணிகள் தங்களின் 2-ஆவது ஆட்டத்தில், 19-ஆம் தேதி நேப்பிள்ஸ் நகரில் மோதுகின்றன.

17

நடப்பு சீசனில் இத்துடன் அனைத்து போட்டிகளிலுமாக 17 ஆட்டங்களில் கோலடிக்காமல் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது செல்சி. அந்த அணி இத்தகைய பின்னடைவை சந்திப்பது, 1994-95-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

35

ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக காா்லோ அன்செலோட்டி பொறுப்பேற்ற பிறகு அந்த அணி பதிவு செய்துள்ள 35-ஆவது வெற்றி இதுவாகும். வேறெந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலிலும் அந்த அணி இத்தனை வெற்றிகளை பதிவு செய்ததில்லை.

7

ஏசி மிலன் அணி இத்துடன், சாம்பியன்ஸ் லீக்கின் நாக் அவுட் சுற்றில் 9 முறை களம் கண்ட நிலையில், அதில் முதல் ஆட்டத்தில் வென்ற 7 முறையுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

5

இத்துடன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 2004-05-க்குப் பிறகு முதல் முறையாக தொடா்ந்து 5 ஆட்டங்களில் வென்றிருக்கிறது ஏசி மிலன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com