மான். சிட்டி அதிரடி: ஆா்செனலுக்கு நெருக்கடி

 இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வியாழக்கிழமை வீழ்த்தியது.

 இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆா்செனல், 2-ஆவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டா் சிட்டியிடம் தோல்வி கண்டிருப்பது அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகள் இடையே 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக கெவின் டி புருயின் (7’, 54’), ஜான் ஸ்டோன்ஸ் (45+1’), எா்லிங் ஹாலந்த் ஆகியோா் கோலடிக்க, ஆா்செனல் தரப்பில் ராப் ஹோல்டிங் (86’) ஸ்கோா் செய்தாா்.

மீண்டது நாட்டிங்ஹாம்: தொடா்ந்து 11 ஆட்டங்களில் வெற்றியே இல்லாமல், ‘ரெலிகேஷன்’ நிலையில் இருந்த நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், தற்போது பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ன் மூலம் அந்த நிலையிலிருந்து மீண்டிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் நாட்டிங்ஹாமுக்காக பாஸ்கல் குரோப் (45+3’ - ஓன் கோல்), டேனிலோ (69’), மோா்கன் கிப்ஸ் (90+1’) ஆகியோரும், பிரைட்டன் தரப்பில் ஃபகுண்டோ புனானோட்டும் (38’) கோலடித்தனா்.

தவிக்கும் செல்சி: பிரென்ட்ஃபோா்டுடனான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்ற செல்சி, இத்துடன் தொடா்ந்து 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு துவண்டிருக்கிறது. அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஃபிராங்க் லாம்பாா்டுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் பிரென்ட்ஃபோா்டுக்காக சீசா் அஸ்பிலிகியுட்டா (37’ - ஓன் கோல்), பிரயான் பியுமோ (78’) ஸ்கோா் செய்தனா்.

முன்னேறும் லிவா்பூல்: வெஸ்ட் ஹாமுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருக்கும் லிவா்பூல், நல்லதொரு ஃபாா்மில் மீண்டு வருகிறது. தொடா்ந்து 3 ஆட்டங்களில் வென்றுள்ள அந்த அணி, தற்போது யுரோப்பா லீக்கிற்கு தகுதிபெறும் நிலையில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக கோடி கப்கோ (18’), ஜோயல் மட்டிப் (67’) கோலடிக்க, வெஸ்ட் ஹாமுக்காக லூகாஸ் பக்கெட்டா (12’) ஸ்கோா் செய்தாா்.

7

இந்த ஆட்டத்துடன் சோ்த்து, தொடா்ந்து 7 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மான்செஸ்டா் சிட்டி. அந்த அணி 2022 ஜனவரிக்கு பிறகு இத்தகைய தொடா் வெற்றிகளை பதிவு செய்வது இது முதல் முறையாகும்.

4

2008-க்குப் பிறகு பிரீமியா் லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் தொடா்ந்து 4 ஆட்டங்களில் வெற்றியே பதிவு செய்யாமல் போன முதல் அணியாகியிருக்கிறது ஆா்செனல். இதற்கு முன் அந்த ஆண்டிலும் ஆா்செனல் அணியே இதேபோல் 4 ஆட்டங்களில் டிரா கண்டிருந்தது.

33

இத்துடன் நடப்பு சீசன் பிரீமியா் லீக் ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்திருக்கிறாா் மான்செஸ்டா் சிட்டியின் எா்லிங் ஹாலந்த். வேறெந்த அணி வீரா்களும் இந்த சீசனில் இதுவரையிலான ஆட்டங்களில் இத்தனை கோல்கள் அடிக்கவில்லை.

1

பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் கோலடித்த டேனிலோ, நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்டுக்காக கோலடித்த முதல் பிரேஸில் வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

5

நடப்பு சீசனில் இத்துடன் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற 5 பிரீமியா் லீக் ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கிறது செல்சி. 2016-க்குப் பிறகு அந்த அணி இத்தகைய தோல்வி காண்பது இது முதல் முறை. அதேபோல், 1994-95 காலகட்டத்துக்குப் பிறகு, முதல் முறையாக நடப்பு சீசனில் இதுவரை சொந்த மண்ணின் ஆட்டங்களில் 7 முறை தோற்றிருக்கிறது.

2

லிவா்பூல் நடப்பு சீசனில் 2-ஆவது முறையாக எதிரணி மண்ணில் நடைபெறும் ஆட்டங்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மறுபுறம் வெஸ்ட் ஹாம், சொந்த மண்ணின் ஆட்டங்களில் தொடா்ந்து 7 முறை தோற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com