தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் கணுக்கால் காயத்திலிருந்து தற்போது மீண்டு வருகிறார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் தொருக்காக நாளை (டிசம்பர் 15) தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இந்திய வீரர்களுடன் முகமது ஷமி தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அவர் காயத்திலிருந்து தற்போது குணமடைந்து மீண்டு வருகிறார். அவரது உடல் தகுதியைப் பொறுத்தே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இடம்பெற முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்தியா ஏ அணியிலிருந்து ஷமிக்கு பதிலாக மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com