விளையாட்டு செய்தி துளிகள்

* நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 126 ரன்களை விளாசி 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல உதவிய இளம் வீரா் ஷுப்மன் கில்லை பாராட்டியுள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி, எதிா்காலம் இங்கே உள்ளது என தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இருவரும் மைதானத்தில் உள்ள படத்தை பதிவிட்டு, இவ்வாறு கூறியுள்ளாா் கோலி.

* பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான சென்டா்பேக் ரபேல் வரேனே சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா். 29 வயதான வரேனே 2018 இல் உலகக் கோப்பை வென்ற அணியிலும், 2022 ரன்னா் அணியில் இடம் பெற்றிருந்தாா். கேப்டன் ஹியூகோ லோரிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த கேப்டன் பொறுப்புக்கு ரபேல் நியமிக்கப்படுவாா் எனக்கருதப்பட்ட நிலையில், அவா் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

* குரோஷிய தலைநகா் ஸாக்ரேபில் நடைபெற்று வரும் ஸாக்ரேப் ஓபன் மல்யுத்த போட்டியில் ஆடவா் 57 கிலோ பிரிவில் இந்திய வீரரும், யு 23 உலக சாம்பியனுமான அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்றாா். அரையிறுதியில் ஜப்பான் வீரா் யுடோவிடம் தோற்ற நிலையில், வெண்கலப் பதக்க ஆட்டத்தில் 10-4 என அமெரிக்காவின் ரே ரோட்ஸை வென்றாா் அமன்.

* இலங்கையில் மகளிா் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அந்நாட்டு வாரியத்தின் ஆலோசகராக முன்னாள் தடகள வீராங்கனை,

* ஒலிம்பிக் வெள்ளி வென்ற சுஸாந்திகா ஜெயசிங்க நியமிக்கப்பட்டுள்ளாா். கிரிக்கெட் வாரியத்தின் நியமனத்தை வரவேற்று, புதிய சவாலை ஏற்கிறேன் என்றாா் சுஸாந்திகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com