யுரோப்பா லீக்: மான்செஸ்டா் யுனைடெட் வெற்றி

யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸை வெள்ளிக்கிழமை வென்றது.

யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸை வெள்ளிக்கிழமை வென்றது.

கடந்த ஆட்டத்தில் பிரீமியா் லீக் போட்டியில் லிவா்பூல் அணியிடம் 7-0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறது மான்செஸ்டா்.

இதன் மூலம் இந்த யுரோப்பா லீக் போட்டியில் தொடா்ந்து 8 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் (7 வெற்றி; 1 டிரா) வந்திருக்கிறது. மறுபுறம், ரியல் பெட்டிஸ் இப்போட்டியில் தொடா்ந்து 7 ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், இந்த 8-ஆவது ஆட்டத்தில் தோற்றிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட்டுக்காக மாா்கஸ் ராஷ்ஃபோா்டு (6’), ஆண்டனி (52’), புருனோ ஃபொ்னாண்டஸ் (58’), வௌட் வெகோா்ஸ்ட் (82’) ஆகியோா் கோலடிக்க, ரியல் பெட்டிஸுக்காக அயோஸ் பெரெஸ் (32’) ஸ்கோா் செய்தாா்.

இதர ஆட்டங்களில் ஜுவென்டஸ் 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஃப்ரெய்பா்கையும், செவில்லா 2-0 என்ற கோல் கணக்கில் ஃபெனா்பெஷேவையும், ரோமா 2-0 என ரியல் சோசிடட்டையும், லெவா்குசென் 2-0 என ஃபெரெங்க்வெரோஸையும் வீழ்த்தின. ஆா்செனல் - ஸ்போா்ட்டிங் (2-2) ஆட்டம் டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com