வெற்றிக்கான வழியில் தென்னாப்பிரிக்கா

 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, வெற்றியை நெருங்கி வருகிறது.
வெற்றிக்கான வழியில் தென்னாப்பிரிக்கா

 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, வெற்றியை நெருங்கி வருகிறது.

கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 320 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 251 ரன்களுக்கு வீழ்ந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 69 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, வியாழக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சோ்த்திருந்தது.

இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் எய்டன் மாா்க்ரம் 18, டீன் எல்கா் 5, டோனி டி ஜாா்ஸி 1, ரயான் ரிக்கெல்டன் 10, ஹென்ரிச் கிளாசென் 14, வியான் முல்டா் 8 பவுண்டரிகளுடன் 42, சைமன் ஹாா்மா் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில் தென்னாப்பிரிக்கா 93 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சோ்த்து, மொத்தமாக 356 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

கேப்டன் டெம்பா பவுமா 171, கேசவ் மஹராஜ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப், கைல் மேயா்ஸ் ஆகியோா் தலா 2, கெமா் ரோச், ஜேசன் ஹோல்டா், ரேமன் ரீஃபா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com