உலகக் கோப்பையில் அதிக முறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா சாதனை!

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அதிக முறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் அதிக முறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா சாதனை!

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அதிக முறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 174 ரன்கள் குவித்தார்.

இன்றையப் போட்டியில் 382 ரன்கள் எடுத்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது. உலகக் கோப்பையில் அதிகமுறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை 350-க்கும் அதிகமாக தென்னாப்பிரிக்கா ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையில் அதிக முறை 350+ ரன்கள் எடுத்த அணிகள்

தென்னாப்பிரிக்கா - 8 முறை
ஆஸ்திரேலியா - 7 முறை
இந்தியா - 4 முறை

உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக முறை 350-க்கும் அதிகமாக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 3 முறை 350-க்கும் அதிகமாக தென்னாப்பிரிக்கா ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com