டிக்கெட் பதுக்கல் குற்றச்சாட்டு: சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்
படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது. மைதானம் கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டு அனைத்து கேலரிகளிலும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளன. இந்த ஆட்டங்களை காண டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை சிஎஸ்கே நிர்வாகம் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், அணியின் நிர்வாகம் தரப்பில் எந்தவொரு டிக்கெட்டும் பதுக்கப்படவில்லை என்றும், வேறு தனியார் நிர்வாகம் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், பேடிஎம் இணையதளத்திலும் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com