ஆசிய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியளித்தது: மூத்த இந்திய வீரர்

ஆசிய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியளித்தது: மூத்த இந்திய வீரர்

ஆசிய போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
Published on

ஆசிய போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தீவிரமாக தயராகி வருகிறது. இதற்கிடையில், ருதுராஜ் தலைமையிலான இளம் இந்திய அணி சீனாவில் செப்டம்டர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது. அதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆசிய போட்டியில் இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் எனது பெயர் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஆசிய போட்டிக்காக அவர்கள் வேறு ஏதேனும் யோசித்திருக்கலாம் என நினைத்து அவர்களது முடிவை ஏற்றுக் கொண்டேன். ருதுராஜ் அணியை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிய போட்டியில் இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என என்னால் உறுதியாக கூற முடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com