ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்காவிடம் ஹீத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்ததாக உலகம் முழுவதும் இன்று காலை செய்தி பரவியது.
முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் ஹீத்தின் நண்பருமான ஹென்றி ஒலோங்காவும், ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், காலை 10.30 மணியளவில் பழைய ட்வீட்டை நீக்கிய ஹென்றி, ஹீத் நலமுடம் இருப்பதாக பதிவிட்டு அவருடன் வாட்ஸ்அப்பில் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

ஹீத் - ஹென்றி வாட்ஸ்அப் உரையாடல்
அந்த வாட்ஸ்அப் உரையாடலில், “நான் மிகவும் நலமாக இருக்கிறேன். ரன்அவுட்டை உடனடியாக திரும்பப் பெறுங்கள் நண்பா.” என்று ஹீத் விளையாட்டாக தெரிவித்திருந்தார்.
நலமுடன் இருப்பவர் உயிரிழந்ததாக பரவிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

