ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; மீண்டும் அணிக்கு திரும்பிய நூர் அகமது!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.
ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; மீண்டும் அணிக்கு திரும்பிய நூர் அகமது!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை தொடர் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றன. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் ஆசியக் கோப்பை உலகக் கோப்பைக்கு முன்னோட்டம் போல் அமையவுள்ளது. 

இன்னும் இரு நாள்களில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சலீம் சஃபி மற்றும் வஃபாதர் மொமண்ட் இடம் பெற்றுள்ளனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது அணிக்குத் திரும்பியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அசதுல்லா கான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அடுத்து நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை ஆகிய இரண்டு பெரிய முக்கியமான தொடர்களுக்கு தயாராவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அணியை அடுத்து நடைபெறவுள்ள இரண்டு பெரிய முக்கியமான தொடர்களுக்கு தயார் செய்வதற்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது  என்றார்.

ஆசியக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விவரம்: ஹஸ்மதுல்லா ஷகிதி (கேப்டன்), ரஹமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிக்கில் (விக்கெட் கீப்பர்), ரியாஸ் ஹாசன், ரஹ்மத் ஷா, நஜீபுல்லா ஸத்ரன், முகமது நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷித் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், முகமது சலீம் சஃபி மற்றும் வஃபாதர் மொமண்ட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com