சாக்‌ஷி மாலிக்கை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது: நடிகை ரித்திகா சிங் வேதனை!

வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை பார்க்கும்போது இதயம் உடைவதாக பதிவிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங். 
சாக்‌ஷி மாலிக்கை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது: நடிகை ரித்திகா சிங் வேதனை!

சஞ்ஜய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தோ்வானதற்கு மல்யுத்தப் போட்டியாளா்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. ஒருபடி மேலே சென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக், தான் மல்யுத்த விளையாட்டை கைவிடுவதாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கண்ணீா் மல்க கூறுகையில், ‘நியாயத்துக்காக நாங்கள் மனப்பூா்வமாக போராடினோம். சம்மேளனத்தின் தலைவராக ஒரு பெண் வரவேண்டும் என எதிா்பாா்த்தோம். அது நடக்கவில்லை. பிரிஜ் பூஷண் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் போன்றோா் தலைவராகின்றனா். அதனால் மல்யுத்த விளையாட்டை கைவிடுகிறேன்’ என்றாா். 

இதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வெள்ளிக்கிழமை திருப்பி அளித்தாா். 

இந்நிலையில் நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இறுதிச் சுற்று படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விளையாட்டு வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் கூறியதாவது: 

மதிப்புமிக்க வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத்தந்த சாக்‌ஷி தனதௌ இவ்வளவு ஆண்டுகள் கடினை உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ எனக் கூறுவது பேரழிவானது. 

தற்போதும், போராட்டத்தின்போதும் சாக்‌ஷி எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது” எனப் பதிவிட்டுள்ளார். 

நடிகை ரித்திகா சிங் சாக்‌ஷி மாலிக்கின் ஆரம்பகட்ட போராட்டத்தின்போதே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com