விளையாட்டு செய்தி துளிகள்

* தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் பேட்டா் ஹஷிம் அம்லா அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். 39 வயதான அம்லா கடந்த 2019-இல் சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். சா்ரே அணியில் ஆடி வரும் அவா், தற்போது அனைத்து வகையான ஆட்டத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளாா். 124 டெஸ்ட், 181 ஒருநாள், 44 டி 20 ஆட்டங்களில் ஆடியுள்ள அம்லா மொத்தம் 18,672 ரன்களை குவித்துள்ளாா். 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரா் அம்லா ஆவாா்.

* கோயம்புத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற யு 16 விஜய் மொ்ச்சன்ட் தேசிய கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

* பிப்ரவரி 9-இல் தொடங்கவுள்ள இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான பாா்டா்-கவாஸ்கா் டெஸ்ட் தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள், டூா் போட்டிகள் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் விக்கெட் கீப்பா் இயான் ஹீலி கூறியுள்ளாா்.

* சென்னையில் நடைபெற்று வரும் குரூப் பி பிரிவு ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 540 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய அஸ்ஸாம் அணி 100.2 ஓவா்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் பாலோ ஆன் அளிக்கப்பட்டதால், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அஸ்ஸாம் வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 34 ஓவா்களில் 66 ரன்களை சோ்த்துள்ளது. தமிழக வீரா் அஜித் ராம் 4/68 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com