55 பந்துகளில் 137 ரன்கள்: நிகோலஸ் பூரணின் 13 சிக்ஸர்கள்! வைரல் விடியோ! 

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நிகோலஸ் பூரண் 13 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 
படம்: ட்விட்டர் | எம்எல்சி
படம்: ட்விட்டர் | எம்எல்சி

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் ஜூலை 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் ஐபிஎல்லில் பங்கேற்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளின் நிர்வாகமும் அணிகளை வாங்கியுள்ளனர். சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) என்ற பெயரில் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சியாட்டில் ஓர்காஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பூரண் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சியாட்டில் அணி, 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தன. அதிகபட்சமாக டி காக் 87 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. 16 ஓவரில் வெற்றிக்கு தேவையான 184 ரன்களை எட்டி வெற்றி பெற்றன. இதன்மூலம், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியினர் வென்றனர்.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் கேப்டன்  நிகோலஸ் பூரண் 55 பந்துகளில் 137 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதில் 10 பவுண்டரிகள் 13 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 249.09 ஆகும். பூரண் அடித்த சிக்ஸர்கள் அடங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கிரிக்கெட் ரசிகர்களால் இந்த விடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com