டெஸ்ட் கிரிக்கெட்டின்போது தூங்கிக்கொண்டிருந்த லபுஷேன்: வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லபுஷேன் தூங்கிக்கொண்டிருந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 
படம்: ட்விட்டர் | ஐசிசி, ஆஸி. வீரர் லபுஷேன்
படம்: ட்விட்டர் | ஐசிசி, ஆஸி. வீரர் லபுஷேன்

2019இல் ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக (கன்கஸன் சப்டியூட்) மாற்று வீரராக விளையாட வந்து அரைசதம் அடித்து பிரபலமானார் மார்னஸ் லபுஷேன். தற்போது ஐசிசி டெஸ்ட் கிரிகெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஸ்மித் போலவே விளையாடும் லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் விளையாடி 3461 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 57.68 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10 சதங்கள், 15 அரைசதங்களும் அடங்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் வார்னர் 3வது ஓவரிலே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய லபுஷேன் இதையறியாமல் தூங்கிகொண்டு இருந்தார். திடீரென சத்தம் கேட்டு விழித்து பார்த்து பேட்டிங்கு தயாராவார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

3ஆம் நாள் முடிவில் அடுத்து ஆடிய ஆஸி அணி 123/4 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரின் 7 ரன்களுடனும் மார்னஸ் லபுஷேன் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 296 ரன்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com