உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங்: இந்திய அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தேர்வான 40 இந்திய வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங்: இந்திய அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தேர்வான 40 இந்திய வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 6-ஆவது உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெறவுள்ளன. இதில், இந்திய அணி சார்பாக பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட 40 வீராங்கனைகளுக்கு சின்னாளபட்டியில் கடந்த 6-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இந்திய அணிக்கு தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேர்வான எஸ்.எஸ்.சுஷ்மிதா, எஸ்.கண்மணி, ஏ.தியோஸ்ரீசாயினி, வாசிமா ஆகிய 4 மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மத்தியபிரதேசம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற 40 வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
 முதல்கட்டப் பயிற்சி முகாமில் அமைப்பாளர் மாஸ்டர் எம்.பிரேம்நாத், தலைமையில், முகாம் மேற்பார்வையாளர் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சி முகாம் பயிற்சியாளர் அமித் படேல், மகாராஷ்டிர மாநில பயிற்சியாளர் மோகினி யாதவ் ஆகியோர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
 இதுகுறித்து ரோல்பால் ஸ்கேட்டிங் மாஸ்டர் எம்.பிரேம்நாத் கூறுகையில், "இதுவரை நடைபெற்ற 5 உலக கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக அணி சார்பாக, சின்னாளப்பட்டியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் நான்கு முறை தேர்வு பெற்றனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com