அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா - ஆஸி. கடைசி டெஸ்ட்: மைதானத்திற்கு இருநாட்டு பிரதமர்கள் வருகை

குஜராத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை காண இருநாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:53 am

DIN

குஜராத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை காண இருநாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காண்கிறார்.

இந்த போட்டியை காண மைதானத்திற்கு வருகை தந்த இரு நாட்டு பிரதமர்களையும் குஜராத் முதல்வர், பிசிசிஐ தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியைக் காண வருகை தந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.