போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது: தோல்வி குறித்து தோனி

போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளா
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. அப்போதுதான் பேட்டிங் தேர்வு செய்திருக்கக் கூடாது என உணர்ந்தேன். போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. அனைவரும் முடிந்தவரை முயற்சி செய்தனர்.

ஐபிஎல் போட்டியின் 61-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது. 

அடுத்து கொல்கத்தா 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வியால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது சென்னை. மறுபுறம் கொல்கத்தாவும் முழுமையாக போட்டியிலிருந்து வெளியேறாத நிலையில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com