விராட் கோலி ஆட்டமிழந்தபோது நூலகமாக மாறிய மைதானம்: பாட் கம்மின்ஸ்

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் அமைதியான நூலகம் போல மாறியதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஆட்டமிழந்தபோது நூலகமாக மாறிய மைதானம்: பாட் கம்மின்ஸ்

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் அமைதியான நூலகம் போல மாறியதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் ஒரு வாரத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு எனக் கூறியிருந்தார். கூறியதை தனது அபார பந்துவீச்சுத் திறமையால் செய்தும் காட்டினார். இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கினார் பாட் கம்மின்ஸ்.

இந்த நிலையில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் அமைதியான நூலகம் போல மாறியதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். மைதானத்தில் ரசிகர்களை கவனியுங்கள் என்றார் ஸ்டீவ் ஸ்மித். நாங்கள் அந்த தருணத்தில் மைதானத்தில் உள்ள ரசிகர்களைக் கவனித்தோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் மிகவும் அமைதியான நூலகம் போல மாறியது. ரசிகர்கள் மிகவும் அமைதியானார்கள். இந்த தருணத்தை நான் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருப்பேன். அது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com