சேப்பாக்கம் மைதானம் குறித்த சிஎஸ்கே வீரர்களின் தகவல் வெற்றிக்கு உதவியது: டேரில் மிட்செல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சாண்டனர் மற்றும் கான்வேவின் மதிப்புமிக்க தகவல்கள் சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற உதவியாக இருந்தது என  டேரில் மிட்செல் தெரிவித்தார்.
சேப்பாக்கம் மைதானம் குறித்த சிஎஸ்கே வீரர்களின் தகவல் வெற்றிக்கு உதவியது: டேரில் மிட்செல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சாண்டனர் மற்றும் கான்வேவின் மதிப்புமிக்க தகவல்கள் சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற உதவியாக இருந்தது என அந்த அணியின் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு கிடைக்கும் மூன்றாவது வெற்றி இதுவாகும். 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சாண்டனர் மற்றும் கான்வேவின் மதிப்புமிக்க தகவல்கள் சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற உதவியாக இருந்தது என அந்த அணியின் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.  நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு மைதானமும் வெவ்வேறு விதமான சவால்களைக் கொண்டது. அந்தந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப எவ்வளவு சீக்கிரம் நம்மை மாற்றிக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்மால் வெற்றிக்கானத் தருணங்களை உருவாக்க முடியும். எங்களது பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப சிறப்பாக பந்துவீசினார்கள். அதேபோல நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டோம். பந்துகளில் சிறிது பௌண்சர்கள் கண்டிப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இரு நியூசிலாந்து வீரர்கள் (டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர்) எங்களுக்கு சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் குறித்த தகவல்களை தெரிவித்தனர். அவர்களது அந்த மதிப்புவாய்ந்த தகவல்கள் எங்களுக்கு உண்மையில் சிறப்பாக கைகொடுத்தது என்றார்.

நேற்றையப் போட்டியில் டேரில் மிட்செல் 67  பந்துகளில் 89 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com