வாய்ப்பு கிடைக்கும்போது மட்டுமே ஏதாவது செய்ய முடியும்: முகமது ஷமி

வாய்ப்பு கிடைக்கும்போது தான் ஏதாவது செய்ய முடியும் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைக்கும்போது மட்டுமே ஏதாவது செய்ய முடியும்: முகமது ஷமி

வாய்ப்பு கிடைக்கும்போது தான் ஏதாவது செய்ய முடியும் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் நேற்றையப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இந்த நிலையில், கிடைக்கும்போது தான் ஏதாவது செய்ய முடியும் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. நியூசிலாந்துடனான போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் போட்டியில்  இல்லாதபோது வெளியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்போது தான் என்னால் ஏதாவது செய்ய முடியும். நீங்கள் அணியில் விளையாடாமல் இருக்கும் தருணம் மிகவும் கடினமானது. ஆனால், உங்களது அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் அணியில் இடம்பெறாமல் இருப்பது குறித்து கவலையடையக் கூடாது. நீங்களும் இந்திய அணியின் ஒரு அங்கம். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நீங்களும் உள்ளீர்கள். ஒவ்வொருவரும் அணியில் உள்ள மற்ற வீரர்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டும். இந்தியாவில் மிகப் பெரிய விளையாட்டு கிரிக்கெட். நீங்கள் இப்போது இருக்கும் இடமே மிகப் பெரிய இடம். அதனால் பிளேயிங் லெவன் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டி இந்த உலகக் கோப்பையில் முகமது ஷமி விளையாடும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com