ஓய்வை அறிவித்த டி காக்: உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
படம்: ஐசிசி
படம்: ஐசிசி

உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை இன்றுக்குள் (செப்.5) ஐசிசியிடம் அனைத்து அணிகளும் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அணியில் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை அணிகள் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் பல அணிகள் இன்று தங்களது அணிகளை அறிவித்துள்ளது. 

சமீபத்தில் இந்திய  அணி அறிவித்தது. தற்போது தென்னாப்பிரிக்க அணி தங்களது  15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஜே, டி காக், ரீஸா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹெய்ன்ரிச் க்ளாசென், சிச்சாண்டா மகாலா, கேஷவ் மகாராஜா, எய்டன் மார்கரம், டேவிட் மில்லர், லுங்கி நெகிடி, ஆண்ட்ரிச் நோர்க்யா, ககிசோ ரபாடா, ஷம்ஸி, வன்-டெர் டுசென். 

உலகக் கோப்பையோடு டி காக் ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார். டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள்தாக தெரிகிறது. ஏற்கனவே 2021இல் டெஸ்டில் ஓய்வு பெற்றார். தற்போது இந்த நவம்பர் மாதத்துடன் ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெற உள்ளார். இவருக்கு 30 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி காக்
டி காக்

140 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டி காக் 5966 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com