துனித் வெல்லாலகே மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்: கே.எல்.ராகுல்

இலங்கையின் துனித் வெல்லாலகே மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர் என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
துனித் வெல்லாலகே மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்: கே.எல்.ராகுல்

இலங்கையின் துனித் வெல்லாலகே மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர் என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்த கே.எல்.ராகுல் அண்மையில் இந்திய அணியுடன் இணைந்தார். காயத்திலிருந்து அணிக்குத் திரும்பி பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். அவர் 106 பந்துகளில் 111  ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின், சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 

இலங்கைக்கு எதிரான சூப்பர்  4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இலங்கைக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு கே.எல்.ராகுல் பேசியதாவது: கடந்த இரண்டு போட்டிகளில் நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் தொடக்கத்தில் பதற்றமாக உணர்ந்தேன். ஆனால், கொஞ்சம் பந்துகளை எதிர்கொண்டபின், நான் நம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினேன். காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்குத் திரும்புவதற்கு நிறைய உழைத்தேன். கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திய அணிக்காக களமிறங்கி எனது பங்களிப்பை சிறப்பாக வழங்க முடியும் என நம்பிக்கையாக இருந்தேன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கீப்பிங் செய்யத் தொடங்கினேன். விக்கெட் கீப்பிங்குக்கும் நிறைய பயிற்சி செய்துள்ளேன். அதனால், நான் பேட்ஸ்மேனாகவும், கீப்பராகவும் எனது பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன். இலங்கைக்கு எதிரான போட்டியின்போது துனித் வெல்லாலகே அபாயகரமான பந்துவீச்சாளராக இருந்தார். அவரது அணிக்காக 5  விக்கெட்டுகளை எடுத்து உதவினார். அவர் இலங்கை அணியின் அபாயகரமான பந்துவீச்சாளராக உள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com