ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி நிகழ்த்தியுள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின. டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுமார் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேபாள அணி சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி படைத்துள்ளது.
- சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் மற்றும் 300-க்கும் அதிகமான ரன்கள் அடித்த முதல் அணி.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்(273) வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை.
- 34 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதமடித்த வீரராக குஷல் மல்லா சாதனை படைத்துள்ளார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்தில் அடித்திருந்தார்.
- 9 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரரானார் திபேந்திர சிங். இந்திய வீரர் யுவராஜ் சிங்கின்(12 பந்துகள்) சாதனை முறியடிக்கப்பட்டது.
- சர்வதேச டி20 போட்டியில் இரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்(26) அடித்த அணியாக நேபாளம் சாதனை.
அதுமட்டுமின்றி, நேபாள வீரர் சந்தீப் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல், இந்த போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.
இதையும் படிக்க | 9 பந்தில் அரைசதம்: யுவராஜ் சாதனையை முறியடித்த நேபாள வீரர்!
இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் நேரடியாக காலிறுதி போட்டியில் களம் காணவுள்ள நிலையில், குரூப் போட்டிகளில் முன்னிலை பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


